தமிழ்நாடு அரசு சாதனை புகைப்பட கண்காட்சி

தமிழ்நாடு அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்த சிறப்பு புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்து பார்வையிட்டார்.;

Update: 2024-03-10 07:52 GMT
கண்காட்சி திறப்பு விழா 

மாவட்ட ஆட்சியர் கூறியதாவது,தமிழ்நாடு முதலமைச்சரின்  சாதனைகள் மற்றும் தமிழ்நாடு அரசால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ளும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு சிறப்பு புகைப்படக் கண்காட்சி நடைபெறவுள்ளது. தமிழ்நாடு அரசு ஏழை எளிய கிராமப்புற மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை அறிவித்து அவற்றை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

Advertisement

தமிழ்நாடு முதலமைச்சர்  தொடங்கி வைத்த திட்டங்களான, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம், மக்களைத் தேடிமருத்துவம், உங்களைதேடி உங்கள்ஊரில், நீங்கள்நலமா, கலைஞரின் மகளிர் உரிமைத் திட்டம், மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், பன்னாட்டு நிறுவனங்களுடன் புதிய தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம், முதலமைச்சரின் காலை உணவுதிட்டம், இலவச வீட்டுமனைப் பட்டாவழங்குதல், மகளிர் சுயஉதவிக்குழுவினர்களுக்கு கடனுதவிகள் வழங்கியது, முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டம் திட்டம், இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டம், விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டம், கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம், நமக்கு நாமே திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் புகைப்படங்களாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்து அமைப்பப்பட்டுள்ள சிறப்பு புகைப்படக்கண்காட்சியினை பொதுமக்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள், திரளாக பார்வையிட்டு, அரசின் செயல்பாடுகள், திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து தெரிந்து பயன்பெறுவதற்காக இக்கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. என்றார். 

Tags:    

Similar News