தமிழ்நாடு அரசின் சாதனைகள் புகைப்பட கண்காட்சி

நாகப்பட்டினத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2024-03-12 04:52 GMT

புகைப்பட கண்காட்சி

புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள அவுரித்திடலில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த சிறப்பு புகைப்படக் கண்காட்சி அரங்கினை மாவட்ட ஆட்சித்தலை ஜானி டாம் வர்கீஸ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகத் தலைவர் என்.கௌதமன் , கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .ஹர்ஷ் சிங் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த சிறப்பு புகைப்படக் கண்காட்சி அரங்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மாணவ- மாணவியர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு துறை சார்பில் அரசு துறைகளை ஒருங்கிணைத்து அரசின் சாதனைகள் மற்றும் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்து வைக்கப்பட்டுள்ள துறை சார்ந்த கண்காட்சி அரங்குகளும் திறக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பொதுமக்கள் அனைவரும் பார்வையிட்டு தமிழ்நாடு அரசின் திட்டங்களை தெளிவாக தெரிந்து கொள்ள ஏதுவாக இந்த கண்காட்சியானது அமையும். அதனைத்தொடர்ந்து பள்ளி கல்லூரி மாணவ/மாணவியர்களிடையே பல்வேறு நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் , தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகத்தலைவர் , கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் , மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் பார்வையிட்டனர். இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் பேபி. நாகப்பட்டினம் நகரமன்ற தலைவர் மாரிமுத்து, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News