அரசு பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க தமிழக அரசு தவறிவிட்டது - அதிமுக சட்டமன்ற உறுப்பினர்

பள்ளி வளாகளத்தில் இருந்த மரம் விழுந்து மாணவர்கள் காயமடைந்தனர்

Update: 2023-12-15 02:15 GMT

காயமுற்ற மாணவர்களை அமைச்சர் பார்வையிட்டார்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மதுரை மாவட்டம், மேலூர் அருகே தெற்கு தெரு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் இன்று அரையாண்டு தேர்வு என்பதால் பள்ளி கட்டிடம் முன்பு உள்ள மரத்திற்கு அடியில் அமர்ந்து படித்து கொண்டிருந்தனர். திடிரென மரம் முறிந்து விழுந்தது. இதில் கீழே அமர்ந்து படித்துக் கொண்டிருந்த 12 மாணவிகள் 5 மாணவர்கள் என மொத்தம் 17 மாணாக்கர்களுக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் மீட்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

சிகிச்சை பெற்றுவரும் மாணவ மாணவிகளை சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜன்செல்லப்பா, பெரியப்புள்ளான் மற்றும் கழக உறுப்பினர்கள் பார்த்து ஆறுதல் கூறினர். அதோடு பழங்கள் மற்றும் நிதியுதவி வழங்கினர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியாரிடம் போனில் பேசி சிகிச்சை பெறும் மாணவர்கள் நலமாக‌ இருப்பதாக தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் ராஜன்செல்லப்பா தெற்கு தெரு அரசு பள்ளியில் மாணவர்கள் மரத்தின் அடியில் நிழலில் உட்கார்ந்து படித்து கொண்டிருந்த போது மரம் சாய்ந்து 17மாணவ, மாணவியர் காயமுற்று இங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த தகவலை அறிந்த கழக‌ பொதுச்செயலாளர் எடப்படியார் அவர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்க நானும், மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரிய புள்ளான் அவர்களும் மற்றும் கழக நிர்வாகிகளும் இந்த மாணவ, மாணவிகளை பார்த்து ஆறுதல் கூறினோம். . அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க மருத்துவமனையை மருத்துவரிடம் கேட்டுள்ளோம் என்றார். எடப்பாடியார் அவர்கள் அறிவுறுத்தலின்படி மாணவ‌, மாணவிகளுக்கு என்ன உதவி வேண்டுமோ அதை செய்ய உறுதியளித்துள்ளோம். கல்வித்துறையில் அதிக நிதியுதவி அளித்தும் உட்கட்டமைப்பு வசதி சரியாக இல்லாத காரணத்தினால் மாணவ, மாணவியர்கள் இது போன்று நிகழ்வை சந்திக்க நேரிடுகிறது எனக்கூறினார்.

இந்த அரசும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும் மிகுந்த கவனம் செலுத்தி அரசு பள்ளிகளில் உள்ள கட்டிடங்களை சீர்ப்படுத்திட வேண்டும், குறிப்பாக மழைக்காலங்களில் அதிக கவனம் செலுத்தி சீர்ப்படுத்திட கேட்டுக் கொள்கிறோம். பள்ளி கட்டிடங்கள் சீர்ப்படுத்திட எம்.எல்ஏ ப்ண்ட் தான் கொடுக்கிறோம்‌. மதுரை மாவட்டத்தில் பள்ளி கட்டிடங்களுக்கு அரசு நிதி ஒதுக்கியதாக தெரியவில்லை. அரசு மாணவர்களுக்கு உரிய‌பாதுகாப்பு அளிக்க தவறி விட்டது. இதை கண்டிக்க வேண்டிய அவசியம் சான்றோர்களுக்கும் படித்தவர்களுக்கும் பெற்றோர்களுக்கும்இருக்கிறது.

அரசு பள்ளியை நம்பி தான் ஏழை எளிய மக்கள் இருக்கிறார்கள். கடந்த காலத்தில் எடப்பாடியார் ஆட்சியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு செய்ததால் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை கூடியுள்ளது. அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்புக்கு சரியான நிதியை ஒதுக்கீடு செய்ய கோரிக்கையை வைத்து அதோடு பள்ளி கல்வி முதன்மை அதிகாரி (சிஇஓ)உடனடியாக ஆய்வு செய்து இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என்றார். அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட மடிக்கணினி திட்டத்தினால் மாணவர்கள் உலகறஇவஉ பெற்றார்கள். மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம் இன்று முடக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் உள்ள திட்டத்தை முடக்குவது தான் இந்த‌‌ அரசின் வேலையாக‌உள்ளது. மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க‌வேண்டும்‌என்ற கோரிக்கையையும் வைக்கிறோம் என்றார்.

Tags:    

Similar News