மோடியால் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளது - பெரியகருப்பன்

பிரதமர் மோடியால் தமிழகம் அதிகம் பாதிப்படைந்துள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் குற்றச்சாட்டினார்.

Update: 2024-04-18 05:16 GMT

பிரதமர் மோடியால் தமிழகம் அதிகம் பாதிப்படைந்துள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் குற்றச்சாட்டினார். 

சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே அரண்மனை சிறுவயல், வெற்றிவயல், கருங்குளம், பகுதிகளில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், சிவகங்கை நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பிரதமர் என்பவர், பல்வேறு மாநில அரசையும், அதன் மக்களையும் சமமாக பாவிக்க கூடியவராக இருக்க வேண்டும். பிரதமர் என்ற உயர்ந்த பொறுப்பிற்கு ஏற்ற மாண்பு மோடியிடம் இல்லை. பல மாநில மக்களிடையே பாகுபாடு உருவாக்குகின்றார். அதில் அதிகம் பாதிக்கப்பட்டது தமிழகம். மாநிலங்களுக்கிடையே நிதி பகிர்வில் தமிழகத்தை வஞ்சிக்கின்ற மோடியை தேர்தலில் அப்புறப்படுத்திட வேண்டும்.

தமிழகத்தில் ஏற்பட்ட இரு இயற்கை பேரிடரின் போது, பேரிடர் மேலாண்மை நிதியை தமிழகத்திற்கு தராமல் வஞ்சித்த மனிதநேயமில்லாத பிரதமர் மோடி என குற்றம் சாட்டினர். கடந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் தனித்தனியே பிரிந்து இருந்ததால் 33 சதவீத வாக்குகளை பெற்று தான் மோடி பிரதமர் ஆனார். இந்த முறை முதல்வர் ஸ்டாலின் முயற்சியால் அனைத்துக் எதிர் கட்சிகளையும் இணைத்து இந்தியா கூட்டணி உருவாகி இருப்பதால் ஆட்சி மாற்றம் என்பது நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.

வடநாட்டிலும் பாஜகவின் செல்வாக்கு சரிந்து கொண்டும், இந்தியா கூட்டணிக்கு ஏறு முகமாகவும் உள்ளது. ஆட்சி மாற்றம் நிகழும் போது தமிழகத்திற்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

Tags:    

Similar News