தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க முப்பெரும் விழா

தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க முப்பெரும் விழா நடைபெற்றது.

Update: 2024-06-22 14:06 GMT

முப்பெரும் விழாவில் கலந்து கொண்டவர்கள்

தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க முப்பெரும் விழா. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் கூட்டரங்கில் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் சார்பில்,

மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றவர்கள், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்கள், மற்றும் பணி நிறைவு பெற்ற உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா சங்கத்தின் மாவட்ட தலைவர் வள்ளிராசன் தலைமையில்,

இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பழனிசாமி சிறப்புரையாற்றினார். மாவட்ட அமைப்பு செயலாளர் தங்கராஜ், மாவட்ட இணை செயலாளர் சக்திவேல், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் உமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி ஏற்புரை மற்றும் பரிசுகள் வழங்கி விழா பேருரை நிகழ்த்தினார்.

மேலும், மாநில தலைவர் அன்பரசன், மாநில பொதுச் செயலாளர் மாரிமுத்து, மாநில பொருளாளர் இளங்கோ, மாநில அமைப்பு செயலாளர் நவநீதகிருஷ்ணன், மாநில மகளிர் அணி செயலாளர் தமிழ்ச்செல்வி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் இதில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News