விழுப்புரத்தில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பைச் சேர்ந்தோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-03-04 16:28 GMT

ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நில அளவையரைத் தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விழுப்புரத்தில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பைச் சேர்ந்தோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், பெரியகோட்டை கிராமத்தில் நில அளவைப் பணிக்குச் சென்ற நிலஅளவையர் பவ்யாவை தகாதவார்த்தைகளால் பேசிமுருகானந்தன் என்பவர் தாக்கினாராம். நில அளவையரைத்தாக்கியவரைக் குண்டர்தடுப்புக் காவல் சட்ட த்தின் கீழ் கைது செய்யக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் எதிரில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் மாவட்டத் தலைவர் மகேஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலர் ராம்குமார், கோட்டத் தலைவர் வேல்முருகன் முன்னிலை வகித்தனர். அமைப்பின் மாவட்டச் செயலர் திருநாவுக்கரசு கண்டன விளக்கவுரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வட்ட இணைச் செயலர் அஜீஸ், தமிழ்நாடு புள்ளியியல்துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலர் சிவக்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினர். முன்னதாக, மாவட்டத் துணைத் தலைவர் அரிபிரசாத் வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் ராஜேஷ் நன்றி கூறினார்.
Tags:    

Similar News