தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் போராட்டம்
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சந்திரகலா தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்பிட வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறுகின்ற வருவாய் கிராம உதவியாளர்களுக்கு வழங்கக்கூடிய மாதாந்திர ஓய்வூதியம் 6750 ருபாயை குடும்ப ஓய்வூதியமாக வழங்க வேண்டும்.
தமிழக முதலமைச்சரின் காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டத்தினை சத்துணவு ஊழியர்கள் மூலமாக அமல்படுத்த வேண்டும். அரசு அனைத்து துறை காலி பணியிடங்களில் பனிமூப்பு அடிப்படையில் முன்னுரிமை அளித்து காலமுறை ஊதியத்தில் பதவி உயர்வு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் நாகராஜன் , அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பாஸ்கரன் , முத்தமிழ்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்.