தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட பொருப்பாளர்களின் ஆலோசனை கூட்டம்
பெரம்பலூரியில் நடைபெற்ற தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட பொருப்பாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் கலந்து கொண்டு பல்வேறு கருத்துரு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட பொருப்பாளர்களின் ஆலோசனை கூட்டம், பெரம்பலூர் அருகேயுள்ள செட்டிகுளம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ரெங்கராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சங்கத்தின் மாநிலத்தலைவர் சேம. நாராயணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் போசும்போது, மண்பாண்ட தொழிலாளர்களின் மூத்தோர்களே, சிக்கி முக்கி காலத்தின் நாகரிக உலகத்தின் முதல் ஊன்றுகோள் என்றும். தற்போது ஸ்தபியாகவும், சிற்பியாகவும் பிரிந்து கிடப்பதாகவும், அனைத்து துறைகளிலும் முன்னேறுவதற்கு உரிமைகோறும் வகையில், வரும் பிப்ரவரி 4ந்தேதி திண்டுக்கல்லில் நடைபெறும் மாபெரும் எழுச்சி மாநாட்டிற்கு அனைவரும் குடும்பத்துடன் வர வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட பொருப்பாளர்களை,அறிமுகப் படுத்தி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.என். பழனி, மாநில மாணவரணி தலைவர் ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இநிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மாவட்ட செயலாளர் வெங்கடேசன், மாவட்ட பொருளாளர் சேட்டு ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறுப் பகுதிகளிலிருந்து மகளிர் பொருப்பாளர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.