தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர் சங்க பொதுக்குழு கூட்டம்

கரூரில் நடைபெற்ற தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பில் மாவட்ட கிளைச் சங்க பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Update: 2024-02-11 03:56 GMT

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, வள்ளுவர் அரங்கத்தில், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின், கரூர் மாவட்ட கிளைச் சங்க பொது குழு கூட்டம் மற்றும் 28 வது ஆண்டு நிறைவு விழா, ஓய்வு பெற்ற மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர் சங்க தலைவர் மாணிக்கம், மண்டல தலைவர் மாணிக்கம் ராமசாமி உள்ளிட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் மாவட்ட அளவிலான முக்கிய பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் ஓய்வூதியர்களுக்கு மத்திய அரசு மருத்துவ படி ரூ.ஆயிரம் வழங்குவது போல், தமிழக அரசும் வழங்கி உதவிட கேட்டுக் கொள்ளும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல குடும்ப பாதுகாப்பு நிதி 50 ஆயிரத்தை ஒன்னறை லட்சமாக உயர்த்தி வழங்க கேட்டும், ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர் எந்த தேதியில் இறந்தாலும், அந்த மாதத்திற்குரிய முழு ஓய்வுதியமும் அனுமதித்து உதவ தமிழக அரசை கேட்டுக் கொண்டும், காப்பீடு திட்டத்தால் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களிடம், மாதம் தோறும் பிடித்தம் செய்யும் ரூ. 497-காப்பீடு கழகத்தைச் சென்றடைகிறது. ஆகவே இந்த காப்பீட்டு திட்டத்தினால் எந்த பயனும் ஓய்வூதியருக்கு கிடைக்க பெறுவதில்லை என்பதால், இந்த திட்டத்தை ரத்து செய்து முன்பு இருந்த மருத்துவ செலவு ஈடுகட்டும் திட்டத்தை நிறைவேற்றி உதவிட வேண்டுமென அரசை கேட்டு, 12 எதிர்பார்ப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும், எட்டாவது ஊதிய குழுவின் நிலுவையாக 21 மாத ஓய்வூதியத்தை அளித்து உதவக் கோரியும், வங்கிகளில் ஓய்வூதியர்கள் தனிநபர் கடன் பெறும் வயதை 80-ஆக உயர்த்தியும்,கடன் தொகைகுரிய உற்சவரம்பை 5 லட்சம் ஆக உயர்த்தியும், 36 தவணைகளில் பிடித்தம் செய்தும் உதவிட வங்கி மேலாளர்களை கேட்பது உள்ளிட்ட 5-ஓய்வூதிய இயக்க தீர்மானங்கள் இயற்றப்பட்டது.

Tags:    

Similar News