தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் சார்பில் 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2024-03-11 12:11 GMT

திருப்பத்தூர் மாவட்டம் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி முன்பு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் சார்பில் 26 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் மாவட்ட பொருளாளர் ஆனந்தன் மாவட்ட துணை செயலாளர் சோமசுந்தரம் மாவட்ட இணை செயலாளர் மஞ்சுளா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தில் ரேஷன் கடை பணியாளர்களை பல்வேறு பிரச்சனைகளை கண்டறிய குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் பொதுப்பணி நிலைத்திறனில் உள்ள குளறுபடிகளை உடனடியாக தீர்க்க வேண்டும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் நகர கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களின் ஊதிய உயர்வு கமிட்டி அறிக்கையினை உடனடியாக அமல்படுத்த வேண்டும். சங்கங்களில் தவணைத் தவறிய நகைகளை ஏலம் விட்ட வகையில் ஏற்பட்ட இழப்பை சங்க நஷ்ட கணக்கிற்கு எடுத்து செல்ல ஆணையிடுக சங்கங்களில் உள்ள காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்பிடுக சேலம் நாமக்கல் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களில் பயிர் கடன் தள்ளுபடி விதிமீறல்கள் எனக் கூறி செயலாளர் பழி வாங்குவதை கைவிட வேண்டும் கருணை ஓய்வு ஊதியம் இன்று வரை ஓய்வு பெற்ற அனைத்து பணியாளர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்கிடுக உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் டாக்பியா அமைப்பின் சார்பில் நடைபெற்றது.

Tags:    

Similar News