தமிழகம் திவாலாகிவிடும்: ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடைப்பெற்றது.
Update: 2024-03-27 09:15 GMT
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஐஜேகே நிறுவனரும், பெரம்பலூர் தொகுதி பாஜ கூட்டணி வேட்பாளருமான பாரிவேந்தர் பேசுகையில், "2019 லோக்சபா தேர்த லில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். இதில், மண்ணச்சநல்லூர் சட்டசபை தொகுதியில் தான் அதிக வாக்குகள் பெற்றேன். நான் பிறந்த ஊர் சேலம் மாவட்டம் ஆத்தூர் என் றாலும், எனது குலதெய்வம் இந்த ஊரில் தான் உள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றால், மீண்டும் 1,500 பேருக்கு தரமான இலவச கல்வி வழங்குவேன். தமிழ்நாடு ஊழல், லஞ்சத்தில் திளைத்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் வாக்குகளுக்காக பல்வேறு இலவசங்களை வழங்கி வருகிறார். இது தொடர்ந்தால், தமிழகம் திவாலாகிவிடும் என்றார். இக்கூட்டத்தில் பாஜ புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன், அமமுக மாவட்ட செயலாளர் ராஜசேகரன், ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் ரத்தினவேல் உட்பட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஐஜேகே முதன்மை செயலாளர் சத்தியநாதன் வரவேற்றார். மாவட்ட தலைவர் செல்வகுமார் நன்றி கூறினார்.