தாமிரபரணி பிறந்தநாள் விழா: கும்பகலசம் ஊற்றி வழிபாடு
முத்தாலங்குறிச்சியில் தாமிரபரணி நதியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கும்பகலசம் ஊற்றி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், முத்தாலங்குறிச்சி குணவதியம்மன் கோயில் மிகவும் பழமையானது. இந்த ஆலயம் தாமிரபரணி ஆற்றினை நோக்கி வடமுகமாக உள்ளது. எனவே இதை காசிக்கு நிகரான தீர்த்தம் என்று கூறுவர்.
இந்த உள்ள லெட்சுமி நரசிம்மர் தாமிரபரணி ஆற்றங்கரையில் இந்த இடத்தில் மட்டும் இருப்பதால் தாமிரபரணி கரை அகோபிலம் எனவும் இந்த ஊரை போற்றுவர். இந்த ஊரில் தாமிரபரணி, ஆற்றங்கரையில் வடக்கு நோக்கி உள்ள குணவதி அம்மன் பாதம் தொட்டு கிழக்கு நோக்கி திரும்புகிறது.
எனவே தாமிரபரணிக்கே ஆசியளித்த குணவதியம்மன் என்ற பெயர் இந்த ஆலயத்துக்கு உண்டு. மேலும் இந்த ஆலயத்தில் வருடந்தோறும் தாமிரபரணி பிறந்த நாள் விழா நடைபெறும். இந்த ஆண்டு அதிகாலை நடை திறக்கப்பட்டது. அதன் பின் சிறப்பு அபிசேகம் அலங்காரம் குணவதி அம்மனுக்கு நடந்தது. தொடர்ந்து குணவதி அம்மன் சன்னிதானத்தில் இருந்து கும்பம் ஊர்வலமாக எடுத்து வந்து தாமிரபரணிக்கு 21 அபிசேகம் நடந்தது. அதன் பின் கும்பாபிசேகம் நடந்தது.
தொடர்ந்து தாமிரபரணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் துணை தாசில்தார் அய்யனார் தலைமை வகித்தார். முனைவர் கந்தசுப்பு முன்னிலை வகித்தார். ஸ்ரீவைகுண்டம் அறநிலையத்துறை இன்ஸ்பெக்டர் நம்பி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். இந்தநிகழ்ச்சியில் ஊர் பிரமுகர்கள் பிச்சகண்ணு, லெட்சுமணன், கனிப்பாண்டியன்,
முத்தாலங்குறிச்சி சிவன், ராமவிநாயகர், லெட்சுமி நரசிம்மர் ஆலய அறங்காவலர்கள் காமராசு, சுடலைமணி, வள்ளிநாயகம், அர்ச்சகர் சுந்தரம், சேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர். பூஜை ஏற்பாடுகளை முருகன் கம்பர் செய்திருந்தார். நிகழ்ச்சி கட்டளைதாரர் அண்ணாமலை செந்தில் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.