வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் தக்காளி விலை உயர்வு!

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் தக்காளி விலை உயர்ந்துள்ளது.

Update: 2024-05-21 16:23 GMT

தக்காளி

வேலூர் நேதாஜி மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம் ஆகிய மாநிலங்கள் மற்றும் ஓசூர், ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து லாரி, டெம்போ போன்ற வாகனங்களில் காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. அதேப்போன்று வேலூரை சுற்றியுள்ள பகுதிகளில் விளையும் காய்கறிகள் மொத்தம் மற்றும் சில்லறை விலையில் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.

சமையலுக்கு தேவைப்படும் காய்கறிகளில் தக்காளி முக்கிய இடத்தை பிடிக்கிறது. தற்போது இதன் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்டது. வேலூர் நேதாஜி மார்க்கெட்டுக்கு வரத்து குறைவால் தக்காளி விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News