ஆரணி அருகே ஆற்று மணல் கடத்தலை தடுக்க பள்ளம் - வட்டாச்சியர் நடவடிக்கை
Update: 2023-11-20 02:07 GMT
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த தச்சூர் ஆற்றில் மணல் கடத்தலில் மணல் கொள்ளையர்கள் ஈடுபடுவதாக வந்த புகாரின் அடிப்படையில் வட்டாட்சியர் மஞ்சுளா தலைமையில் வருவாய் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது தச்சூர் ஆற்றில் சட்டவிரோதமாக மணலை அள்ளி சலித்து குவியல் குவியலாக வைக்கபட்டுருந்த சுமார் 30 யூனிட் ஆற்று மணலை வருவாய் துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் சமன் செய்தனர். பின்னர் ஆற்று பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாதப்படி முக்கிய வழிகளில் பள்ளம் தோண்டி சாலையை அடைத்தனர். அப்போது மண்டல துணை வட்டாட்சியர் மேற்கு, ஆரணி டவுன் வருவாய் ஆய்வாளர், தச்சூர் கிராம நிர்வாக அலுவலர், ஆரணி கிழக்கு கிராம நிர்வாக அலுவலர், பொதுப்பணித்துறையின் ஆய்வாளர்கள், தச்சூர் மற்றும் 12.புத்தூர் கிராம உதவியாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.