டாஸ்மாக் கடையை அகற்றிவிடுவதாக கூறி பணம் கேட்டு மிரட்டுவதாக புகார்!
டாஸ்மாக் கடையை அகற்றிவிடுவதாக கூறி பணம் கேட்டு மிரட்டுவதாக ச.ம.க நிர்வாகி மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடையை அகற்றிவிடுவதாக கூறி பணம் கேட்டு மிரட்டுவதாக ச.ம.க நிர்வாகி மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம், சேர்வைக்காரன்மடம் கோவில் தெருவைச் சார்ந்த அருள் ஞானகணேஷ் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகார் மனுவில் "பல ஆண்டுகளாக காமராஜர் நகர் பகுதியில் அரசின் அனுமதி பெற்ற டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.
தற்போது பார் நடத்த அரசு அனுமதி வழங்க உள்ள நிலையில் அந்த கடையை செயல்படுத்த விடாமல் சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட செயலாளர் பி.எம்.அற்புதராஜ் என்பவர் ரூ.5,00,000- கேட்டு மிரட்டி வருகிறார். டாஸ்மாக் கடை பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நிலையில் இதுவரை அப்பகுதி பொதுமக்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
ஆனால் பி.எம்.அற்புதராஜ் என்பவர் என்னிடம் பணம் பறிக்கும் எண்ணத்தில் அவரின் கட்சி அதிகாரத்தை பயன்படுத்தி என்னை மிரட்டுகிறார். மேலும், அந்த இடத்தில் டாஸ்மாக் கடையை வைக்க விடாமல் என்னால் செய்ய முடியும் என சவால் விடுகிறார். ஆகவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.