டாஸ்மாக் சுவற்றில் துளையிட்டு கொள்ளை

கடம்பத்தூர் அருகே வெண்மனம்புதூரில் உள்ள மதுபானக் கடையின் சுவற்றில் துளையிட்டு மதுபாட்டில்கள், பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.;

Update: 2024-02-18 02:07 GMT

துளையிட்டு கொள்ளை 

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் வெண்மனம்புதூர் சூர்யா நகர் பகுதியில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது, இக்கடை அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணி வரை அரசு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில் நேற்று இரவு வழக்கம் போல் டாஸ்மாக் கடை ஊழியர்கள் இரவு 10 மணி அளவில் விற்பனை முடிந்து கடையை மூடி சென்ற நிலையில் இன்று காலை வந்து பார்த்த பொழுது டாஸ்மாக் கடையில் சுவற்றை துளையிட்டு மர்ம நபர்கள் பணம் மற்றும் மதுபானத்தை திருடிச் சென்றுள்ளது கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Advertisement

இது குறித்து கடம்பத்தூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் டாஸ்மாக் கடையின் சுவரை துளையிட்டு மர்ம நபர்கள் உள்ளே வந்தது கண்டறியப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் கடையிலிருந்து பணம் மற்றும் மதுபானங்கள் எவ்வளவு திருடுபோனது என்பது குறித்து தகவல் அளிக்க டாஸ்மாக் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அங்குள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News