தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு ஆட்டோ கவிழ்ந்து விபத்து - 5 பேர் காயம்

Update: 2023-12-04 02:56 GMT
தேசிய நெடுஞ்சாலையில் டாட்டா ஏசி சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

 மதுரையிலிருந்து கோவில்பட்டி நோக்கி சென்ற டாட்டா ஏசி வாகனம் மதுரை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது விருதுநகர் சத்திர ரெட்டியபட்டி விளக்கு அருகே வந்து கொண்டிருந்த பொழுது திடீரென ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்த அந்த டாட்டா ஏசி வாகனம் தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அந்த வாகனத்தை ஓட்டி வந்த சிவக்குமார் மற்றும் வாகனத்தில் பயணம் செய்த தொழிலாளிகளான ராமர், பாண்டி, சத்தியமூர்த்தி, பேச்சிமுத்து, ஆகிய ஐந்து தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.

இந்த விபத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற ஊரக காவல் நிலைய போலீசார் விபத்தில் சிக்கிய தொழிலாளிகளை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பினார். காயமடைந்தவர்கள் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் குறித்து ஊரக காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு வாகனம் கவிழ்ந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது அதை தொடர்ந்து போக்குவரத்து சீர் செய்யப்பட்டு வாகனங்கள் சென்றனர்.

Tags:    

Similar News