பைக் மீது டாரஸ் லாரி மோதல்: ஒருவர் பலி
மதுராந்தகம் அருகே இருசக்கர வாகனம் மீது டாரஸ் லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்தில் ஒருவர் பலியானர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-26 09:03 GMT
கோப்பு படம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள அணைக்கட்டு காவல் நிலையத்திற்கு உட்பட்ட கூவத்தூரில் இருந்து மதுராந்தகம் வரும் சாலையில் வாலோடை என்ற இடத்தில் கல்குவாரிக்கு ஜல்லி ஏற்றி வந்த டாரஸ் லாரி எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியதில் இரு சக்கரம் வாகனத்தில் வந்த வாயலூர் கிராமத்தை சேர்ந்த நித்தியானந்தம் என்பவர் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி பலியானார்.
இந்த விபத்து குறித்து பிரேதத்தை கைப்பற்றி அணைக்கட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.