மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவிலில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2024-06-15 06:06 GMT

ஆர்ப்பாட்டம் 

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சார்பில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், புதிய ஊதிய குழுவில் முதுகலை ஆசிரியருக்கு ஊதிய விதத்தில் உரிய அங்கீகாரத்தை அளிக்க வேண்டும், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு நடத்திவிட்டு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்திடுவதை ஆண்டுதோறும் உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், கன்னியாகுமரி மாவட்டம்  நாகர்கோவில் உள்ள முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பென்னட் ஜோஸ் தலைமை வகித்தார். அரசு உதவி பெறும் பள்ளி மாநில செயலாளர் அஜின் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் சிபு விளக்க உரையாற்றினார். ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் ஷீபா மோள்,  கிராஸ் ஞான ஜில்ட், கே எம் வேலவன் உட்பட ஏராளம் பேர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை ஐயப்பன் பிள்ளை முடித்து வைத்து பேசினார்.
Tags:    

Similar News