புதிய மாணவர்களை மலர் தூவி வரவேற்ற ஆசிரியர்கள் !

சிவகங்கை அரசு பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களை மலர் தூவி ஆசிரியர்கள் வரவேற்றனர்.;

Update: 2024-03-12 09:42 GMT

 மாணவர்களை மலர் தூவி வரவேற்ற ஆசிரியர்கள்

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை 48 காலனியில் அமைந்துள்ள நகராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் தமிழக முதல்வரின் புதிய மாணவர் சேர்க்கை திட்டத்தின் கீழ் புதிதாக 25 மாணவர்களை இந்த பள்ளியில் பெற்றோர்கள் சேர்த்தனர். புதிதாக சேர்ந்த மாணவர்களை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மாரிமுத்து தலைமையில், வட்டார கல்வி அலுவலர் இந்திராணி முன்னிலையில் முதல் வகுப்பு தீவிர மாணவர் சேர்க்கைக்கான பேரணி நடைபெற்றது. புதிதாக சேர்ந்துள்ள மாணவ, மாணவிகளை தொடக்கக் கல்வி அலுவலரும், பள்ளி தலைமை ஆசிரியை மரிய செல்வியும் கிரீடம் அணிந்து மாணவ, மாணவிகளுக்கு சால்வை அணிவித்து கெளரவித்து பள்ளிக்குள் மலர் தூவி வரவேற்று அழைத்து சென்றார். இதனைத் தொடர்ந்து அரசுபள்ளியில் முதலாம் வகுப்பு தீவிர மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு துண்டு பிரச்சுரங்களை மாணவ, மாணவிகளின் பெற்றோர்களிடம் தலைமையாசிரியை மற்றும் வட்டார கல்வி அலுவலர் வழங்கினார். புதிதாக சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News