அணித்தலைவர் பயிற்சி முகாம் மற்றும் சிந்தனைநாள் திரளணி விழா
நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு சாரண மாவட்டங்களைச் சார்ந்த சாரண சாரணீயர்களுக்கான அணித்தலைவர் பயிற்சி முகாம் மற்றும் சிந்தனைநாள் திரளணி விழா நடந்தது.;
நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு சாரண மாவட்டங்களைச் சார்ந்த சாரண சாரணீயர்களுக்கான அணித்தலைவர் பயிற்சி முகாம் மற்றும் சிந்தனைநாள் திரளணி விழா நடந்தது.
நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு சாரண மாவட்டங்களைச் சார்ந்த சாரண சாரணீயர்களுக்கான அணித்தலைவர் பயிற்சி முகாம் மற்றும் சிந்தனைநாள் திரளணி விழா 21.02.24 மற்றும் 22.02.24 ஆகிய இரண்டு நாட்கள் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் தொழில்நுட்பக்கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது.
கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்களின் தலைவரும் சாரண இயக்கத்தின் மாவட்ட துணைத்தலைவருமான ர.சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற துவக்க விழாவில், கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்களின் முதன்மைச் செயல் அலுவலர் அகிலா முத்துராமலிங்கம், கல்லூரியின் முதல்வர் முனைவர்.பி.கோபிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாம் செயலர் து.விஜய் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட முதன்மை ஆணையர் ப.மகேஸ்வரி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு முகாமினைத் துவக்கி வைத்தார். மாவட்டக் கல்வி அலுவலர்கள் பாலசுப்ரமணியம் (தொடக்கக்கல்வி),இரா.இரவிச்சந்திரன்,(இடைநிலைக்கல்வி), ப.கணேசன்(தனியார்பள்ளிகள்) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நாமக்கல் மாவட்டத்தின் அனைத்துவகை பள்ளிகளில் இருந்தும் 614 சாரண சாரணீயர்கள் கலந்து கொண்டனர்.
மாணவர்களிடம் தன்னம்பிக்கை, தலைமைத்துவம், சகோதரத்துவம் மற்றும் குழுமனப்பான்மை ஆகியவற்றை வளர்க்கும் விதத்தில் நடத்தப்பட்ட இம்முகாமினை பயிற்சி ஆணையர்கள் சேவியர் பிரின்ஸ்,இரா.கவிதா, ப.ஜெயந்தி, ஜெ.மேரிபாத்திமா, ஷகிலாபிபி ஆகியோர் அடங்கிய குழு சிறப்பாக நடத்தியது. நிறுவனர் தினத்தினையொட்டி சிந்தனைநாள் திரளணி போட்டிகள் நடத்தப்பட்டது.
நெருப்பின்றி சமைத்தல், அணிவகுப்பு, கிராமிய நடனம், உடற்திறக்காட்சி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசளிக்கப்பட்டது. அமைப்பு ஆணையர் இரா.சடையம்மாள் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட இணைச்செயலர் ப.தேன்மொழி,உதவிச்செயலர்கள்சு.கோபி, மணியரசன், வி.தீபக்,முத்துமணி, கல்லூரியின் கட்டடவியல் துறைத்தலைவரும் திரிசாரண ஆசிரியருமான சுரேஷ்குமார்,பவித்ரா மற்றும் கல்வி நிறுவன திரி சாரணர்கள் அடங்கிய குழு சிறப்பாகச் செய்திருந்தது..