ஓட்டல் ஊழியரை தாக்கி செல்போன் பறிப்பு - வாலிபர் கைது

ஓட்டல் ஊழியரை தாக்கி செல்போன் பறிப்பு - போலீசார் அதிரடி - செல்போன் மீட்பு

Update: 2024-02-14 10:45 GMT

வாலிபர் கைது

திருவாரூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 19). இவர் கோட்டக்குப்பம் அடுத்த கீழ்புத்துப்பட்டில் உள்ள தனியார் ஓட்டலில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் புதுச்சேரிக்கு சென்று விட்டு பஸ்சில் கீழ்புத்துப்பட்டு வந்து இறங்கி கிழக்கு கடற்கரை சாலை யில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் சந்தோசை மறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார். ஆனால் அவர் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் சந்தோசை தாக்கி அவர் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றார். இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்தில் சந்தோஷ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சந்தோசிடம் செல்போன் பறித் தது அனிச்சங்குப்பம் பகுதியை சேர்ந்த வனேஷ் (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். செல்போனையும் மீட்டனர்.
Tags:    

Similar News