கொடைக்கானலில் 37 டிகிரியை தொட்ட வெப்பநிலை
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக 25 டிகிரி முதல் 37 டிகிரி வரை வெப்பம் நிலவுவதாக வான் இயற்பியல் ஆய்வக ஆராய்ச்சியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஒரு குளுமையான சுற்றுலா தலமாகும், இங்கு தமிழகமட்டுமின்றி வெளிமாநில சுற்றுலாப்பயணிகளின் வருகையும் அதிகரித்து காணப்படுவது வழக்கம், இந்நிலையில் வசந்த காலம் துவங்கிய முதலே கடந்த சில நாட்களாக கொடைக்கானல் மலைப்பகுதியில் 25 டிகிரி வெப்பம் முதல் 37 டிகிரி வரை வெப்பம் நிலவுவதாக வான் இயற்பியல் ஆராய்ச்சியாளர் ராஜ லிங்கம் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த மாதத்தில் 18 டிகிரி வரை வெப்பம் நிலவிய நிலையில் தற்போது மலைப்பகுதியில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது, மேலும் இரவு நேரங்களிலும் கடும் குளிரும் நிலவி வருகிறது, இதனையடுத்து வெப்பத்தினை சமாளிக்க பொதுமக்கள் இளநீர்,நுங்கு,மோர் உள்ளிட்ட பானங்கள் உள்ள கடைகளுக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர், வெப்பம் அதிகரிப்பின் காரணமாக சில நாட்களாக வருவாய் நிலம்,தனியார் தோட்டப்பகுதி,வனப்பகுதிகளில் தீ எரிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது...