ஈரோடு : கிடா ரத்தம் குடித்த பூசாரி உயிரிழப்பு

ஈரோடு அருகே நடந்த கோயில் திருவிழாவில் ஆட்டு ரத்தத்தை குடித்த கோயில் பூசாரி வாந்தி மயக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்து பலியானார்.

Update: 2024-05-23 11:45 GMT

கோயில் பூசாரி மரணம்

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொளப்பலூர் செட்டியாம்பாளையத்தில் அண்ணமார் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் மே மாதம் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரண் கிடாய் பூஜை நடைபெற்றது. இந்த பரண் கிடாய் பூஜையின் போது, கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பரண் போன்ற அமைப்பின் மீது வேண்டுதல் வைத்துள்ள பக்தர்கள் கொடுக்கும் ஆட்டு கிடாய்களை பூசாரிகள் வெட்டி, அவற்றின் பச்சை ரத்தத்தில் வாழைப்பழத்தை பிசைந்து சாப்பிடுவதும், வழக்கம்.

அது போன்ற பரண் கிடாய் பூஜையில் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நல்லகவுண்டன்பாளையம் பாலாஜி நகரை சேர்ந்த பழனிச்சாமி கலந்து கொண்டு வெட்டப்பட்ட கிடாயின் பச்சை ரத்தத்தை பழனிச்சாமி உட்பட 5 க்கும் மேற்பட்ட பூசாரிகள் குடித்தும், வாழைப்பழத்தை ரத்தத்துடன் கலந்தும் சாப்பிட்டு உள்ளனர்.

சிறிது நேரத்தில் பழனிச்சாமிக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் மயங்கி விழுந்த பழனிச்சாமியை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர், தொடர்ந்து அவரது உடல் கோபி அரசு மருத்துமனையில் உடற்கூறு ஆய்விற்காக கொண்டு செல்லப்பட்டது,

Tags:    

Similar News