கணபதிசாலை பணியின் போது டெம்போ கவிழ்ந்து ஓட்டுநர் படுகாயம்
கணபதிகல் பகுதியில் சாலை பணியின் போது டெம்போ கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் படுகாயம் அடைந்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-18 08:43 GMT
பள்ளத்தில் கவிழ்ந்த லாரி
கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி அடுத்த கணபதிக்கல் பகுதியில் கடந்த சில மாதங்களாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதி யில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை சாலை அமைக்கும் ஒப்பந்த நிறுவனத்திற்காக பணியில் ஈடுபட்டிருந்த டெம்போ மற்றொரு வாகனத் திற்கு வழிவிட முயன்ற போது பக்கவாட்டில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் திருத்துவபுரம் பகுதியை சேர்ந்த டிரைவர் ராஜேஷ் காயம் அடைந்தார்.அவரை அந்த பகுதி யில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்தில் சிக்கிய வாகனத்தை மீட்கும் பணியும் துரிதமாக நடைபெற்றது.