புறவழிச்சாலையில் தற்காலிகமாக நிழற்கூரை அமைப்பு

மதுராந்தகம் புறவழிச்சாலையில் பயணிகள் வசதிக்காக தற்காலிகமாக நிழற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-25 14:38 GMT

மதுராந்தகம் புறவழிச்சாலையில் பயணிகள் வசதிக்காக தற்காலிகமாக நிழற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.


அச்சிறுபாக்கம் பகுதியில், சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. சென்னை செல்லும் மார்க்கத்தில், தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் நிழற்குடை அமைக்கப்பட்டது. திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திண்டிவனம், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதி பேருந்துகள், இந்த நிறுத்தத்தில் நின்று, பயணியரை ஏற்றி சென்று வந்தன. தேசிய நெடுஞ்சாலையிலேயே பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், வாகன விபத்துகளும் ஏற்பட்டு, பயணியர் காயமுற்றனர்.

இதனால், பழைய நிழற்குடை அகற்றப்பட்டு, 100 மீட்டர் துாரம் தள்ளி, மாற்று இடத்தில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அந்த மாற்று இடத்தில் நிழற்குடை இல்லாததால், பயணியர் வெயிலில் பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் கோரிக்கை விடுத்தனர். தற்போது, பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பாக, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக செல்லும் புறவழிச்சாலையில் தற்காலிகமாக நிழற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News