உப்பு உற்பத்திக்கான பணி தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

பகிங்ஹாம் கால்வாயில் போதியளவு தண்ணீர் வரத்து இல்லாததால் உப்பளங்களில் உப்பு உற்பத்திக்கான பணி, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Update: 2024-07-01 09:12 GMT

பகிங்ஹாம் கால்வாயில் போதியளவு தண்ணீர் வரத்து இல்லாததால் உப்பளங்களில் உப்பு உற்பத்திக்கான பணி, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

திருப்போரூர்- - நெம்மேலி செல்லும் சாலையில், பகிங்ஹாம் கால்வாயையொட்டி, ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் அரசு நிலங்கள் உள்ளன. கடந்த 2022ம் ஆண்டு, தமிழக சால்ட் கார்ப்பரேஷன் நிறுவனம், இந்தப் பகுதியில் உப்பளம் அமைப்பதற்காக, வருவாய்த் துறை வாயிலாக, 3,010 ஏக்கர் பரப்பளவு உடைய நிலத்தை, 20 ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில் பெற்றது. உள்ளூர் மற்றும் வெளிமாவட்ட தொழிலாளர்கள், உப்பு தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கடந்த 2022, 2023 பருவ மழை காரணமாக, பகிங்ஹாம் கால்வாயில் நீர் வரத்து அதிகரித்து, உப்பளம் முழுதும் நீரில் முழ்கியது. இதனால், உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. கடந்த ஏப்ரலில் கோடை வெயில் அதிகரித்தது. தற்போது வரை அவ்வப்போது வெப்ப அனல் வீசி வருகிறது. உப்பளம் செயல்பட வாய்ப்புள்ள நிலையில், தேவையான தண்ணீர் வரத்து இல்லாததால், திட்டமிட்டபடி உப்பு உற்பத்தி செய்ய முடியவில்லை. இதனால் உற்பத்தியாளர்கள், உப்பு உற்பத்திக்கான பணியை தற்காலிகமாக நிறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News