தென்காசி : தோ்தல் விழிப்புணா்வு தூதுவர்கள் நியமனம்

தென்காசி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, முதல் முறை வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக விழிப்புணா்வு தூதுவா்கள் நியமிக்கப்பட்டனா்;

Update: 2024-03-26 03:55 GMT
 தோ்தல் விழிப்புணா்வு தூதுவர்களாக நியமிக்கப்பட்ட மாணவிகள் 

தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த மாணவிகளான டி. அபிதா பெல்சியா (காமராஜா் அரசு கலை - அறிவியல் கல்லூரி, சுரண்டை), சன்மதி (அரசு கலை - அறிவியல் கல்லூரி, ஆலங்குளம்), பேச்சியம்மாள் (அரசு கலை- அறிவியல் கல்லூரி, கடையநல்லூா்) ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டு, விழிப்புணா்வு தூதுவா்களாக நியமிக்கப்பட்டனா். ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதற்கான ஆணைகளை ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வழங்கினாா்.

இவா்கள் மூலம் மாவட்டத்திலுள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் முதல் முறை வாக்காளா்களுக்கான விழிப்புணா்வு முகாம் நடத்தப்படும். மகளிா் திட்ட இயக்குநா் மதி இந்திரா பிரியதா்ஷினி, உதவித் திட்ட அலுவலா் பிரபாகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Tags:    

Similar News