கல்லூரி சந்தையை துவக்கி வைத்த தென்காசி மாவட்ட ஆட்சியர்
தென்காசியில் 4 வது கல்லூரி சந்தை நிகழ்ச்சி சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் நேற்று தொடங்கியது.;
By : King 24x7 Angel
Update: 2024-02-15 12:02 GMT
தென்காசி மாவட்டத்தில் 4 வது கல்லூரி சந்தை நிகழ்ச்சி சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் நேற்று தொடங்கியது. கண்காட்சி யினை மாவட்ட ஆட்சித்தலைவர் கே. கமல் கிஷோர் தலைமை தாங்கி திறந்து வைத்தார். மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் இரா. மதி இந்திரா பிரியதர்ஷினி முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் இரா. சின்னத்தாய், நபார்டு உதவிப்பொது மேலாளர் சுரேஷ் ராமலிங்கம், மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் வா. மு. சிவ குமார், கல்லூரி பொருளி யல் துறை தலைவர் செல்வ கணபதி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.