நலத்திட்ட உதவிகளை வழங்கிய தென்காசி மாவட்ட ஆட்சியர்
அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்த புகைப்பட கண்காட்சியை ஆட்சியர் தொடங்கி வைத்தார்;
Update: 2023-12-15 03:30 GMT
நலத்திட்ட உதவிகளை வழங்கிய தென்காசி மாவட்ட ஆட்சியர்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் வட்டத்திற்கு உட்பட்ட வெள்ளாகுளம் கிராமத்தில் வைத்து மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தலைமை தாங்கிய மாவட்ட ஆட்சித் தலைவர் துரை ரவிச்சந்திரன் 85 பயனாளிகளுக்கு ரூ. 11. 01 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினர். மேலும் அங்கு அமைக்கப் பட்டிருந்த காய்கறி கண்காட்சி, அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்த புகைப்பட கண்காட்சி ஆகியவற்றை மாவட்ட ஆட்சித் தலைவர் துரை ரவிச்சந்திரன் திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உள்பட ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.