லஞ்சம் வாங்கிய தென்காசி ஆர்.ஐ கைது

விவசாயிக்கு தரிசு நிலம் சான்றிதழ் வழங்க ரூ.5000 லஞ்சம் வாங்கிய தென்காசி வருவாய் அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-07-04 03:53 GMT

தர்மராஜ்

தென்காசி அருகேயுள்ள மத்தளம்பாறையைச் சேர்ந்தவர் கதிரேசன் (34). விவசாயி. இவர் தனது நிலத்திற்கு தரிசு நிலம் என சான்றிதழ் பெற தென்காசி தாலுகா அலுவகத்தில் விண்ணப்பம் செய்திருந்தார். இதுகுறித்து கதிரேசன் தாலுகா அலுவலகம் சென்று கேட்ட போது வருவாய் அலுவலரை சந்திக்கும்படி கூறியுள்ளனர். தென்காசி வருவாய் அலுவலர் தர்மராஜை நேரில் சந்தித்த கதிரேசன் தனக்கு தரிசு நில சான்றிதழ் வேண்டும் என கூறியுள்ளார்.

தரிசு நிலம் சான்றிதழ் வேண்டும் என்றால் ரூ. 20, 000ம் தர வேண்டும் என வருவாய் அலுவலர் தெரிவித்துள்ளார். கதிரேசன் தன்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என தெரிவிக்கவே, ரூ. 5, 000ம் தந்தால்தான் சான்றிதழ் தரமுடியும் என வருவாய் அலுவலர் தர்மராஜ் கூறிவிட்டார். இதனால் மனவேதனை அடைந்த கதிரேசன் இதுகுறித்து தென்காசி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறிய அறிவுரையின்படி கதிரேசன் ரசாயன பவுடர் தடவிய ரூ. 5,000ம் பணத்தை இன்று தென்காசி வருவாய் அலுவலர் அலுவலகம் சென்று அங்கிருந்த வருவாய் அலுவலர் தர்மராஜிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி. எஸ். பி. , பால்சுதர், இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ, சப்-இன்ஸ்பெக்டர் ரவி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தெய்வக்கன் ராஜா மற்றும் போலீசார் விரைந்து சென்று தர்மராஜை கைது செய்தனர்.

Tags:    

Similar News