சங்கரநாராயண சுவாமி கோவிலில் தை கார்த்திகை சிறப்பு தீபாரதனை

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் நடந்த தை கிருத்திகை விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனை வழிபட்டனர்.

Update: 2024-01-21 03:01 GMT
தீபாரதனை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் தென் தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை கார்த்திகை முன்னிட்டு சண்முகருக்கு 32 வகையான பொருள்களால் கொண்டும் மலர்களால் அபிஷேகம் செய்து மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் இன்று காலையில் நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News