ஆட்சீஸ்வரர் திருக்கோவிலில் தைப்பூச தெப்ப உற்சவ திருவிழா
செங்கல்பட்டு மாவட்ட, அச்சிறுப்பாகத்தில் உள்ள ஆட்சீஸ்வரர் திருக்கோவிலில் தைப்பூச தெப்ப உற்சவ திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Update: 2024-01-26 00:42 GMT
அச்சிறுபாக்கம், ஆட்சீஸ்வரர் திருக்கோவிலில் தைப்பூச தெப்ப உற்சவ திருவிழா. தொண்டை நாட்டு சிவத்தலங்களில் ஒன்றானதும், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமான அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோவில் இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ளது. தைப்பூச தெப்ப உற்சவ விழாவை முன்னிட்டு, காலை மங்கள இசை உடன் தொடங்கி, மகா அபிஷேகம் நடந்தது.
பின், இரவு கோவிலின் எதிரே உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு எழுந்தருளிய, உற்சவ மூர்த்தியான இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் தெப்பத்தில் எழுந்தருளி அருள் பாலித்தனர் அதன் பின்னர், தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் மும்முறை வலம் வந்தனர். இந்த விழாவில், அச்சிறுபாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதி பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.