செங்கோட்டையில் தைப்பூச திருவீதியுலா
செங்கோட்டை தர்மசம்வர்த்தினி சமேத குலசேகர நாதசுவாமி கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருவீதியுலா நிகழ்ச்சி நடந்தது.
Update: 2024-01-22 03:24 GMT
தென்காசி மாவட்டம் செங்கோட்டை தர்மசம்வர்த்தினி அம்பாள் சமேத குலசேகர நாதசுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 16ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 5ம் திருவிழாவை முன்னிட்டு காலை 6 மணிக்கு ருத்ர ஏகாதசி ஜெபம், சுவாமி-அம்பாள் பூதசிம்ம வாகனத்தில் ரிஷபவாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரங்களும் தீபாராதனையும் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.