தலைவாசல் ஏரி வாய்க்காலை உடைத்து சேதம்: 2 பேர் மீது வழக்கு

கெங்கவல்லி அருகே தலைவாசல் ஏரி வாய்க்காலை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் மீது வழக்குப் பதிவாகியுள்ளது.

Update: 2024-01-13 09:24 GMT

கெங்கவல்லி அருகே தலைவாசல் ஏரி வாய்க்காலை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் மீது வழக்குப் பதிவாகியுள்ளது.

கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி அருகே தலைவாசலை அடுத்த பட்டுத்துறை ஊராட்சி துணைத் தலைவராக பதவி வகித்து வருபவர் விஜயகுமார். இவரும், அதே கிராமத்தை சேர்ந்த தேவராஜ் என்பவரும் தலைவாசல் ஏரி வாய்க்காலை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் சிவசங்கராபுரம் ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக சிவசங்கராபுரம் ஏரி வாய்க்காலில் இருந்த 2 தடுப்பணைகளை உடைத்து அவர்கள் சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து அவர்கள் இருவர் மீதும், தலைவாசல் பொதுப்பணித்துறை பொறியாளர் மாணிக்கம் தலைவாசல் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார். அதன்பேரில், பட்டுதுறை ஊராட்சி துணைத்தலைவர் விஜயகுமார், விவசாயி தேவராஜ், ஆகியோர் மீது தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகு ராணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

முன்னதாக பொதுப்பணித்துறைக்கு சம்பந்தமான தடுப்பணைகளை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நேற்று காலை 10 மணிக்கு தடுப்பணையை பார்வையிட வந்த தாசில்தார் பாலகிருஷ்ணன், பொதுப்பணித்துறை அதிகாரி மாணிக்கம் ஆகியோரை தலைவாசல் ஊராட்சி கிராம பொதுமக்கள் ஊராட்சி தலைவர் ஆறுமுகம் தலைமையில் முற்றுகை போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்த தலைவாசல் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

Tags:    

Similar News