தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டம்: அன்னதானம் வழங்கல்

தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டத் திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கிய கல்வி நிறுவனம்.

Update: 2024-04-21 16:46 GMT

அன்னதானம் வழங்கல்

உலகப்புகழ் பெற்ற,  தஞ்சாவூர் பெருவுடையார் கோவில் தேரோட்டத் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.  இத்திருவிழாவில், தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் சார்பாக சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

தஞ்சை மாநகரின் முக்கிய வீதிகளான மேலராஜ வீதி, கீழராஜ வீதி ஆகிய வீதிகளில் பொதுமக்களுக்கும், பக்த கோடிகளுக்கும் அன்னதானம் வழங்குவதற்கான முகாம் மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இந்த அன்னதான முகாமில் சுமார் 15,000 நபர்களுக்கு பார்சல் மூலம் புளிசாதம் மற்றும் தயிர் சாதம் விநியோகம் செய்யப்பட்டது. 

இந்நிகழ்விற்கு, மருது பாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர்  கொ.மருதுபாண்டியன் தலைமை வகித்தார். மருதுபாண்டியர் கல்லூரியின் முதல்வர் மா.விஜயா, துணை முதல்வர் இரா.தங்கராஜ் தலைமையில் மருதுபாண்டியர் கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் ஆகியோர் அடங்கிய குழு தேர் அதன் நிலையிலிருந்து புறப்பட்டது

முதல் நண்பகல் வரை தேர் திருவிழாவை காண வந்த பக்த கோடிகளுக்கும், பொது மக்களுக்கும் அன்னதானம் வழங்கி வழங்கி சிறப்பித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி மேலாளர் இரா.கண்ணன் செய்திருந்தார்.

Tags:    

Similar News