தஞ்சாவூர் மருத்துவம், ஊரக நலப் பணிகள் துணை இயக்குநர் பதவியேற்பு

தஞ்சாவூர் மருத்துவம், ஊரக நலப் பணிகள் (குடும்பம்) துணை இயக்குநர் பதவியேற்பு நிகழ்வு நடந்தது.

Update: 2024-04-01 11:37 GMT

தஞ்சாவூர் மருத்துவம், ஊரக நலப் பணிகள் (குடும்பம்) துணை இயக்குநர் பதவியேற்பு நிகழ்வு நடந்தது.


தஞ்சாவூர், மருத்துவம், ஊரக நலப் பணிகள் மற்றும் (குடும்பம்) துணை இயக்குநராக ஜி.குமரவேல் தற்காலிகமாக பொறுப்பு வகித்து வந்தார்.  இந்நிலையில், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கடந்த 20 ஆண்டுகளாக குழந்தைகள் நல மருத்துவராகவும், தலைமை மருத்துவராகவும் பணியாற்றிய டாக்டர் அ.அன்பழகன் (52), துணை இயக்குனராக பதவி உயர்வு பெற்றார்.

 இதையடுத்து திங்கள்கிழமை காலை அன்பழகன் துணை இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி போராசியர்கள் டாக்டர் பாலசுப்பிரமணியன், வினோத், ராஜேந்திரன், முத்துவிநாயகம், கார்த்திகேயன், தென்றல், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை டாக்டர்கள் அறிவானந்தம், கலைச்செல்வம், திருவையாறு அரசு மருத்துவமனை டாக்டர் லோகநாதன், சுகாதார துணை இயக்குநர் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட மருத்துவ அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News