தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து, கொண்டாட்டம்

ரூ.366 கோடி மதிப்பீட்டில் கூட்டுக்குடிநீர் திட்டம் வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து, திமுக மற்றும் நகராட்சி சார்பில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

Update: 2024-02-19 15:55 GMT

இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

பெரம்பலூர் மாவட்டத்திற்கு ரூ.366 கோடி மதிப்பீட்டில் கூட்டுக்குடிநீர் திட்டம் வழங்கிய தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, நன்றி தெரிவித்து, திமுக மாவட்டச் செயலாளர் இராஜேந்திரன் தலைமையில் பொதுமக்கள் மற்றும் நகராட்சி வார்டு உறுப்பினர்கள் சார்பில் பெரம்பலூர் காமராஜர் சிக்னல் பகுதி, புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் பிப்ரவரி 19ஆம் தேதி பட்டாசு வெடித்து,

இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். இந்த நிகழ்ச்சியில், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் துரைசாமி, மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் பரமேஷ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ராஜேந்திரன்,

பொதுக்குழு உறுப்பினர் முகுந்தன், ஒன்றிய செயலாளர்கள் ராஜ்குமார், ஜெகதீசன், மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் அப்துல் பாரூக், தொ.மு.ச.மாவட்ட கவுண்சில் தலைவர் ரெங்கசாமி, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் மணிவாசகம்,

மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் அப்துல்கரீம், சிவசங்கர், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ரினோபாஸ்டின், நகர துணை செயலாளர் சபியுல்லா, நகர பொருளாளர் முத்துக்குமார், நகராட்சி துணைத் தலைவர் ஹரிபாஸ்கர், நகராட்சி உறுப்பினர்கள் ரகமத்துல்லா, சித்தார்த், நல்லுசாமி,சேகர், மணிவேல், தங்க.சண்முகசுந்தரம்,

மற்றும் மாவட்ட பிரதிநிதி அழகுவேல், வழக்கறிஞர் கண்ணன், தங்கமயில்செந்தில், உள்ளிட்டதிமுக உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News