தோக்கியம் கிராமத்தில் மாபெரும் எருது விடும் திருவிழா

தோக்கியம் கிராமத்தில் 70ஆம் ஆண்டு மாபெரும் எருது விடும் திருவிழா 200க்கும் மேற்பட்ட காளைகள் மந்தையில் சீறிப்பாய்ந் ஓடியது.

Update: 2024-02-09 14:32 GMT

சீறிப்பாய்ந்த காளைகள்

திருப்பத்தூர் அடுத்த கந்திலி தோக்கியம் கிராமத்தில் மாபெரும் எருதுவிடும் திருவிழா ஊராட்சி மன்ற தலைவர் சாந்தசீலன் தலைமையில் நடைப்பெற்றது. திருப்பத்தூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுமார் 200க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு மந்தையில் சீறிப்பாய்ந்து ஓடின.

இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நொடியில் ஓடிக் கடந்து வெற்றி பெற்ற காளைகளுக்கு முதல் பரிசாக 70 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது பரிசாக 50000, மூன்றாவது பரிசு 40000 உட்பட மொத்தம் 60 பரிசுகள் வழங்கப்பட்டது. திருவிழாவில் சுமார் 5000க்கும் மேற்பட்ட காளையர்கள் உட்பட பொதுமக்களும் பங்கேற்றனர்.

இந்த எருது விடும் திருவிழாவிற்கு வருவாய் துறை வட்டாட்சியர் கோட்டாட்சியர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து அனுமதி கொடுத்தனர் மற்றும் தீயணைப்பு துறை மருத்துவ துறை உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளுடன் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற இளைஞர்கள் சுமார் 25 பேருக்கு லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று சென்றனர்.

திருப்பத்தூர் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் செந்தில் தலைமையில் சுமார் 150க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News