ஆசிரியர் குடும்பத்தில் விவசாயியான முதுகலை பட்டதாரி !
சோழவந்தான் அருகே ஆசிரியர் குடும்பத்தில் பிறந்து,அரசு வேலையை துறந்த முதுகலைப் பட்டதாரி முழு நேர விவசாயியாக சாதனை படைத்து வருகிறார்.
சோழவந்தான் அருகே ஆசிரியர் குடும்பத்தில் பிறந்து,அரசு வேலையை துறந்த முதுகலைப் பட்டதாரி முழு நேர விவசாயியாக சாதனை படைத்து வருகிறார்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலத்தை சேர்ந்தவர் பாண்டிக்குமார்(52).1994 ஆம் ஆண்டிலேயே எம்.எஸ்.சி பட்டதாரியான, இவரது தந்தை நமகோடி, தாய் செல்லம்மாள் இருவருமே அரசு பள்ளியில் தலைமையாசிரியராக பணி புரிந்தவர்கள்.
இவரது மனைவியும் ஆசிரியையாக பணிகிறார்.இரண்டு மகள்களும் பட்டதாரிகள்.இதில் மூத்த மகளுக்கு திருமணமாகியதுடன்,குரூப்.2 தேர்வில் வெற்றி பெற்று விரைவில் அரசு அதிகாரியாக பொறுப்பேற்க உள்ளார்.
மேலும் உடன் பிறந்த 3 சகோதரிகளில், இருவர் ஆசிரியைகளாகவும்,ஒருவர் சுகாதார துறை கண்காணிப்பாளராகவும் பணிபுரிகின்றனர்.
இவ்வாறு அனைவரும் பட்டதாரியான, ஆசிரியர் குடும்பத்தில் பிறந்த பாண்டி குமார் மட்டும், சிறு வயது முதலே விவசாயத்தில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்துள்ளார்.
மேலும் தேசிய பால்வளத்துறையில் அரசு ஊழியராக 4 வருடம் பணிபுரிந்தும், ராஜினாமா செய்து விட்டு வந்து முழு நேர விவசாயியாக மாறி விட்டார்.வரப்பு வெட்டுதல்,உழவு, நாற்றங்கால், தண்ணீர் பாய்ச்சுதல்,அறுவடை என அனைத்து பணிகளையும் இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறார்.
இவரது கல்லூரி நண்பர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணி புரிந்தாலும், இவர் மட்டும் சிறு வயது முதலே ஆவலுடன் செய்த விவசாயத்தை மட்டுமே செய்து வருவது ஆச்சர்யமான ஒன்றாகும்.