முதியோரை காம்பால் தாக்கிய ஆட்டோ ஓட்டுனர்
முதியோரை காம்பால் தாக்கிய ஆட்டோ ஓட்டுனர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-08 15:13 GMT
முதியவரை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்
விருதுநகர் ரயில் நிலையம் முன்பு வயதான முதியவர் ஒருவர் படுத்து கிடந்த நிலையில் அவரை அந்த ரயில் நிலையத்தில் ஆட்டோ ஓட்டி வரும் விருதுநகர் பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் கம்பால் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்த வீடியோவை பார்த்த விருதுநகர் கூரைக்குண்டு பகுதியைச் சார்ந்த பழனியப்பன் என்ற 60 வயது முதியவர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி ஆட்டோ ஓட்டுனர் ராஜேந்திரன் என்பவர் மீது மேற்கு காவல் நிலையத்தில் மீது புகார் அளித்துள்ளார். இந்த புகார் அடிப்படையில் மேற்கு காவல் நிலைய போலீசார் ஆட்டோ ஓட்டுனர் ராஜேந்திரன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுகள் செய்துள்ளனர்.