பணப்பட்டு வாடா செய்தவரை சிறைப்பிடித்த பாமக வேட்பாளர் !

திண்டுக்கல்லில் திமுக கவுன்சிலரை பாமக வேட்பாளர் ஓட விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2024-04-17 07:35 GMT

 பாமக வேட்பாளர்

திண்டுக்கல்லில் திமுக கவுன்சிலரை பாமக வேட்பாளர் ஓட விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல்லில் 16வது வார்டு திமுக கவுன்சிலர் சேகர். இவர் ஜி டி என் சாலையில் பணப்பட்டுவாடா செய்து கொண்டிருக்கும் போது அந்த வழியாக பிரச்சாரம் மேற்கொண்டு வந்த பாமக வேட்பாளர் திலகபாமா பணப்பட்டு வாடா செய்தவர்களை கையும் களவுமாக பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தார். திமுக கவுன்சிலர் வண்டியை எடுத்துக்கொண்டு தப்பித்து ஓட்டம் பிடித்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News