பாரதிய ஜனதா கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

Update: 2023-12-04 07:49 GMT

பா.ஜ.கவினர் கொண்டாட்டம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டிஸ்கர், ஆகிய மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றதை ஒட்டி , பெரம்பலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் பிச்சமுத்து தலைமையில் அக்கட்சியினர் பலர் டிசம்பர் மூன்றாம் தேதி இரவு பெரம்பலூர் நான்கு ரோடு புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் பொட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி வெற்றியை கொண்டாடினார்கள். மேலும் மீண்டும் மோடி வேண்டும் மோடி என்ற கோசத்தோடு முழக்கமிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள், இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட பொது செயலாளர் முத்தமிழ்செல்வன் மாவட்ட தொழில் துறை பிரிவு மாவட்ட தலைவர் முருகேசன், மாவட்ட பொது செயலாளர் ஜெயபால், ராமச்சந்திரன், பட்டியல் அணி மாவட்ட தலைவர் சதீஷ்குமார், நகரத் தலைவர் சுரேஷ், மகளிர் அணி மாவட்ட பொது செயலாளா் விஜயா மற்றும் முருகேசன், அருள் உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சி சென்று மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News