தமிழகத்துக்கு நிதி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம்
தமிழகத்துக்கு நிதி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது என சட்டசபையில் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் குற்றம் சாட்டினார்.
தமிழக சட்டசபையில் கவர்னர் உரை குறித்த விவாதத்தில் வக்கீல் ராேஜந்திரன் எம்.எல்.ஏ பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:- மக்களின் துயர்நீக்கும் ெபாருட்டு, முதல்-அமைச்சர் சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் சேதமடைந்ந பகுதிகளில் பாதிக்கப்பட்ட 45 லட்சத்து 19 ஆயிரம் குடும்பங்களுக்கு 2,022 கோடி ரூபாய் வழங்குவதற்கு உத்தரவிட்டார். நிதி இல்லாத நிலையிலும் அள்ளிக்கொடுத்த முதல்-அமைச்சர் நீங்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சுமார் 15 லட்சம் நபர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைப் படுத்தப்பட்டதை தொடர்ந்து, மாநிலங்களில் நிதி ஆதாரம் திரட்டும் திறனும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒன்றிய அரசு 30-06-2022 முதல் சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டு முறையை நிறுத்தியதன் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
ஒன்றிய அரசுக்கு வரியாக தமிழ்நாடு ஒரு ரூபாய் கொடுத்தால் ஒன்றிய அரசு 29 பைசாவைத்தான் தமிழகத்திற்கு தருகிறது. ஆனால், பா.ஜனதா கட்சி ஆட்சி செய்யும், மத்திய பிரதேசம் வரித்தொகையாக ஒரு ரூபாயை ஒன்றிய அரசுக்கு கொடுத்தால், ஒன்றிய அரசு மத்திய பிரதேச மாநிலத்திற்கு 2 ரூபாய் 17 காசுகள் வழங்குகிறது. இந்த வேறுபாடு ஏன்? இந்த பாரபட்சம் ஏன்? இவ்வாறு அவர் கூறினார்.