கிறிஸ்தவர்களின் தவக்காலம் இன்று தொடக்கம்
கிறிஸ்தவர்களின் புனித நாளான புனித வெள்ளிக்கு முன்பு 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் தவக்காலம் இன்று சாம்பல் புதன் முன்னிட்டு துவங்கப்பட்டது.
By : King 24x7 Angel
Update: 2024-02-14 10:52 GMT
கிறிஸ்தவர்களின் புனித நாளான புனித வெள்ளிக்கு முன்பு 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் தவக்காலமாக கொண்டாடுவது வழக்கம். இந்த தவக்கால துவக்க விழா இன்று சாம்பல் புதன் முன்னிட்டு துவங்கப்பட்டது. கத்தோலிக்க திருச்சபைகளில் காலையில் இந்த சாம்பல் புதனை முன்னிட்டு திருப்பலி நடைபெற்று. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நடந்த சாம்பல் புதன் வழிபாட்டில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். நாகர்கோவில் கோட்டார் சவேரியார் ஆலயத்தில் நடந்த திருப்பலியில் கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை கலந்து கொண்டார். பின்னர் ஆராதனையில் கலந்து கொண்டவர்களுக்கு சாம்பலால் நெற்றியில் சிலுவை அடையாளம் இடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானார் கண்டு கலந்து கொண்டனர். இது போன்று மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா ஆலயம், குளச்சல் காணிக்கை மாதா ஆலயம், திருத்துவபுரம் மூவொரு இறைவன் ஆலயம் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. சிஎஸ்ஐ ஆலயங்களிலும் சாம்பல் புதன் முன்னிட்டு சிறப்பு ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.