கிராமச் செயலகம் அலுவலகக் கட்டிடத்தினை ஆய்வு செய்த கலெக்டர்

புதுக்கோட்டை மாவட்டம்,தேராவூர் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட கிராம செயலகத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-03-02 09:01 GMT

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியம், தேராவூர் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் ரூ.39.95 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கிராமச் செயலகம் அலுவலகக் கட்டிடத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் பொறி.பரமசிவன், விராலிமலை ஒன்றியக்குழுத் தலைவர் காமு.மு.பி.மணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
Tags:    

Similar News