வாக்கு எண்ணும் மையம் : முன்னேற்பாடு பணிகளை ஆட்சியர் ஆய்வு
தூத்துக்குடி பாராளுமன்ற பொதுத் தேர்தல் வாக்கு எண்ணும் மையம் அமையவுள்ள வ.உ.சி. அரசு பொறியியல் கல்லூரியை தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி பார்வையிட்டார்.
தூத்துக்குடி பாராளுமன்ற பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது. மேலும் ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணப்படுகிறது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர் ஒப்புகை சீட்டு இயந்திரங்கள் ஆகியவற்றை வாக்கு எண்ணும் மையமான வ.உ.சி. அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்படவுள்ளது. இதற்காக கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர் ஒப்புகை சீட்டு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் காப்பு அறை, வாக்கு எண்ணிக்கை மையம், முகவர்கள் மற்றும் அலுவலர்கள் பயன்படுத்தும் பாதை ஆகியவற்றையும், ஊடக மையம் மற்றும் குடிநீர்வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்வது குறித்தும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி பார்வையிட்டார்.
ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சஅஜய்சீனிவாசன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (நகரம்) கேல்கர் சுப்பிரமணிய பாலசந்தர், உதவி தேர்தல் அலுவலர்கள் ம.பிரபு (தூத்துக்குடி), உமா (விளாத்திகுளம்), சுகுமார் (திருச்செந்தூர்), விக்னேஷ் (ஸ்ரீவைகுண்டம்), கிருஷ்ணகுமார் (ஓட்டப்பிடாரம்), ஜேன் கிறிஸ்டி பாய் (கோவில்பட்டி), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராஜகுரு, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (க(ம)ப) செல்வி, உதவி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், வட்டாட்சியர்கள் பிரபாகரன் (தூத்துக்குடி), கோபால்(ஏரல்), வ.உ.சி. அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் பீட்டர்தேவராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.