பள்ளிக்கு சமையலறை கட்டிடம் கட்டும் பணி துவங்கியது.
பள்ளிக்கு சமையலறை கட்டிடம் கட்டும் பணி துவங்கியது.;
By : King 24x7 Website
Update: 2024-01-02 16:49 GMT
பள்ளிக்கு சமையலறை கட்டிடம் கட்டும் பணி துவங்கியது.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே குன்றில்கடவு பகுதியில் அரசு தொடக்கப் பள்ளியில் சுமார் 60 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கூடத்திற்கு இருந்த சமையலறை சேதம் அடைந்தது. சமையல் செய்ய முடியாத நிலை ஏற்பட்ட நிலையில் சமையல் செய்வதற்கான அறை இல்லாததால் மழையின் போது மாணவர்கள் படிக்கும் வகுப்பறைகளுக்குள்ளும், மழை இல்லாத நாட்களில் வெளியில் சமைத்து மாணவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வந்தது. இதனால் மாணவ, மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில் குன்றில் கடவு பள்ளியில் சமையலறை கட்டித் தர வேண்டும் என பெற்றோர்கள் மட்டுமின்றி சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர். பள்ளியின் அருகே சமையலறை கட்டிடம் கட்டும் பணி துவங்கியுள்ளது. இதனால் பெற்றோர்கள் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.