ராஜினாமா செய்து பரபரப்பு பேட்டியளித்த கவுன்சிலர்
நெல்லையில் திமுக பெண் கவுன்சிலர் ராஜினாமா செய்து பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.;
Update: 2024-03-02 06:33 GMT
கவுன்சிலர் பேட்டி
நெல்லை மாநகராட்சி 7வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் இந்திரா மணி நேற்று (மார்ச் 1) திடீரென தனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்தார். மாநகராட்சி ஆணையரிடம் அதற்கான கடிதம் வழங்கினார். இது குறித்து இந்திரா மணி அளித்த பேட்டியில் எனது வார்டில் மக்கள் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. மக்களுக்கு பதில் கூற முடியாததால் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன் என பரபரப்பாக பேசினார்.