செயல் அலுவலரை  கண்டித்து கவுன்சிலர்கள் போராட்டம்

அழகப்பபுரம் பேரூராட்சியில் செயல் அலுவலரை  கண்டித்து கவுன்சிலர்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2024-06-06 13:25 GMT

அழகப்பபுரம் பேரூராட்சியில் செயல் அலுவலரை  கண்டித்து கவுன்சிலர்கள் போராட்டம் நடத்தினர்.


கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம் பேருராட்சியில் உள்ள மீன் சந்தை மேம்பாட்டிற்கு மூலதன மானிய நிதியிலிருந்து ரூபாய் 1 கோடி ரூ 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.  அந்த நிதியை பேரூராட்சி மீன் சந்தை மேம்பாட்டிற்கு பயன்படுத்தாமல் பேரூராட்சி செயல் அலுவலர்  திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. மேலும் சில திட்டங்களை செயல்படுத்துவதிலும் பேரூராட்சிக்கு எதிராக செயல்படுவதாக கூறி பேரூராட்சி தலைவர் அனிதா ஆண்ட்ரூஸ் தலைமையில் துணைத் தலைவர் ஆண்ட்ரூஸ் மணி மற்றும் கவுன்சிலர்கள் நேற்று முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இன்றும் 2-ம் நாளாக  பேரூராட்சித் தலைவர் அனிதா ஆண்ட்ரூஸ் மற்றும் 11 கவுன்சிலர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பேரூராட்சி அலுவலகத்தில் வந்த பொதுமக்களை அலுவலகத்திற்குள் நுழைய விடாமல் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News